1. Home
  2. தமிழ்நாடு

கிடா முட்டு சண்டை... அனுமதி கோரிய வழக்கில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !!

கிடா முட்டு சண்டை... அனுமதி கோரிய வழக்கில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !!


கிடா முட்டு சண்டை போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டுமென யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்ற மதுளை கிளை தெரிவித்துள்ளது.

கம்பம் பகுதியைச் சேர்ந்த தர்வேஷ் முகைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தேனி மாவட்டம் கம்பம், அனிஷ் தோப்பு, மணிக்கட்டி ஆலமரம் பகுதியில், வருகிற ஜூன் 26ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கிடா முட்டு சண்டை நடத்த, கம்பம் டவுன் மேற்கு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு கடந்த 8ஆம் தேதி மனு அளித்தோம்.

ஆனால் மனுவுக்கு இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லை. எனவே, கம்பம், அனிஷ் தோப்பு, மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் வருகிற 26ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கிடா முட்டு சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கிடா முட்டு சண்டை... அனுமதி கோரிய வழக்கில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !!
அப்போது, ஏற்கனவே இப்பகுதியில் 2 முறை கிடா முட்டு சண்டை போட்டி நடத்த அனுமதி கேட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கிடா சண்டை போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கு எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினார். மேலும் கிடா முட்டு சண்டைப் போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டுமென யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like