ரத்த வெள்ளத்தில் மிதந்த நகைக்கடை அதிபரின் மனைவி.. மக்கள் அதிர்ச்சி !!

ரத்த வெள்ளத்தில் மிதந்த நகைக்கடை அதிபரின் மனைவி.. மக்கள் அதிர்ச்சி !!

ரத்த வெள்ளத்தில் மிதந்த நகைக்கடை அதிபரின் மனைவி.. மக்கள் அதிர்ச்சி !!
X

அடகு கடை உரிமையாளரின் மனைவி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேட்டுத் தெருவில் பத்தேசந்த் (78) என்பவர் வசித்து வந்தார். இவர், திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரேம்கவர் (70) என்ற மனைவியும் 4 மகன்களும் உள்ளனர். இவர்களும் நகைக்கடை தொழிலை கவனித்து வந்துள்ளனர் இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு பத்தேசந்த் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

sdf

அப்போது வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் மனைவி பிரேம்கவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டுஅதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் அவரே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு உயிரிழந்த பிரேம் கவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

theft

அப்பெண்ணின் கழுத்தில் கத்தியால் அறுத்து கொலை செய்தது ஆய்வு மற்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேம்கவர் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it