தமிழகத்தில் நாளையும் இங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் நாளையும் இங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் நாளையும் இங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை !
X

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இங்கெல்லாம் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் அங்கு குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இந்தநிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

met

நாளை (ஏப்.29) சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30, மற்றும் 01 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மே 2ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

met

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை, என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


newstm.in

Next Story
Share it