பரிசு பெறுவது ஏற்புடையதல்ல.. திடீரென கடிதம் எழுதிய தலைமைச் செயலாளர் !!

பரிசு பெறுவது ஏற்புடையதல்ல.. திடீரென கடிதம் எழுதிய தலைமைச் செயலாளர் !!

பரிசு பெறுவது ஏற்புடையதல்ல.. திடீரென கடிதம் எழுதிய தலைமைச் செயலாளர் !!
X

தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா என்ற நூல சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட இருந்த நிலையில் இதற்கான பரிசுத்தொகையை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழக அரசு சார்பில் தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களை தேர்வு செய்து பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு தலைமை செயலாளர் வெ.இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா என்ற நூல் சிறந்த நூலாக தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த நூலை எழுதிய ஆசியர் வெ.இறையன்பு மற்றும் பதிப்பகத்தார்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து தலைமை இறையன்புவுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தான் அரசுப்பதவியில் இருப்பதால், தமிழக அரசின் விருது மற்றும் பரிசுத்தொகையை ஏற்ற மறுப்பதாக பதில் கடிதம் எழுதியுள்ளார்.

irainbu letter

இது குறித்து அவர் தமிழ் வளர்ச்சித்துறை செயலவாளர் மகேசன், காசிராஜனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில், 2018ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று தெரிவுக்குழுவால் தெரிவு செயயப்பட்ட தமிழில் சிறந்த நூல்களை எழுதிய நூல் ஆசிரியர் மற்றும் அதன் பதிப்பகத்தாகளுக்கு பரிசுகள் வழங்க கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 8-ம் நாள் பார்வையில் காணும் அரசாணையில், தெரிவு செய்யப்பட்ட நூல்கள் அதன் வகைபாடு நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனில் என் நூலான மூளைக்கு சுற்றுலா தெரிவு செய்யப்பட்டு நாளை நடைபெறவிருக்கும் அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
irainbu letter
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் தெரிவு செய்யப்பட்ட எனது படைப்பிற்கு இவவாண்டு நடைபெறும் விழாவில், தலைமை செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையதல்ல. எனவே எனது படைப்பிற்கு வழங்கப்பெறும் இப்பரிசை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


newstm.in

Next Story
Share it