தொடக்கமே இப்படியா? - அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருட்டு?

தொடக்கமே இப்படியா? - அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருட்டு?

தொடக்கமே இப்படியா? - அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருட்டு?
X

அமைச்சராக பதவியேற்றபிறகு திருப்பதியில் நடந்நத ஆலோசனை கூட்டத்தில் அமைச்சரும் நடிகையுமான ரோஜாவின் செல்போன் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திராவில் ஆளும் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த நடிகை ரோஜாவுக்கு நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு அண்மையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற ரோஜா, நேற்று திருப்பதிக்கு சென்றார். திருப்பதியில் உள்ள எஸ் வி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார்.

கூட்ட அரங்கில் கலந்து கொண்ட அவரின் செல்போன் திடீரென மாயமானது. இதுகுறித்து போலீசாரிடம் அவர் தகவல் தெரிவித்த நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர். இதில் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர் ஒருவர் மேஜையில் இருந்த செல்போனை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

MLA-Roja

இதையடுத்து அந்த தற்காலிக ஊழியர் இடமிருந்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருடு போகவில்லை. கவனக்குறைவாக மேசையில் செல்போனை வைத்து விட்டு அமைச்சர் ரோஜா கூட்ட அரங்கிற்கு சென்றார்.

அப்போது கேட்பாரற்று விழுந்த செல்போனை தற்காலிக ஊழியர் எடுத்து வைத்துக்கொண்டார். தற்காலிக ஊழியருக்கு மேசையிலிருந்தது அமைச்சர் ரோஜாவின் செல்போன் என தெரியாது என காவல்துறையினர் கூறினர். அமைச்சர் ரோஜாவின் செல்போன் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

newstm.in

Next Story
Share it