அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணியுடனா? சசிகலாவின் பதில் இது தான்..!!

அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணியுடனா? சசிகலாவின் பதில் இது தான்..!!

அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணியுடனா? சசிகலாவின் பதில் இது தான்..!!
X

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தமிழ்நாடு முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்கிடையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 நாட்கள் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள சசிகலா இல்லத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், சசிகலா நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அரசியலில், கொடநாடு வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், ‘ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நிலையில் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன். அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக விரைவில் மேல்முறையீடு செய்வேன்’ என்றார்.

அப்போது, கொடநாடு வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த கேள்விக்கு சசிகலா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சசிகலா திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சசிகலா, ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார். ‘உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா?’ என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்ல மறுத்த சசிகலா ‘கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து அப்புறம் பதிலளிக்கிறேன்’ என்றார்.

Tags:
Next Story
Share it