கட்சித் தொடங்குகிறாரா பிரசாந்த் கிஷோர்..?: பரபரப்பு ட்வீட்..!

கட்சித் தொடங்குகிறாரா பிரசாந்த் கிஷோர்..?: பரபரப்பு ட்வீட்..!

கட்சித் தொடங்குகிறாரா பிரசாந்த் கிஷோர்..?: பரபரப்பு ட்வீட்..!
X

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான தனது பரிந்துரைகளை அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதனை பிரஷாந்த் கிஷோர் ஏற்க மறுத்து விட்டதாகவும் காங்கிரஸ் தெரிவித்தது.
For the second time, Prashant Kishor meets Sonia Gandhi
இந்த நிலையில், நேரடி அரசியலில் ஈடுபடப் போவதாக பிரஷாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பு கொள்கையை வடிவமைக்க உதவுவதற்குமான எனது தேடல் 10 வருட ரோலர் கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது.

தற்போது, மக்களிடம் நான் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலத்தை மையமாக வைத்து அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
Share it