கஞ்சா கடத்தும் கும்பலுடன் இன்ஸ்பெக்டர் பிரியாணி விருந்து.. புகைப்படம் வைரல் !

கஞ்சா கடத்தும் கும்பலுடன் இன்ஸ்பெக்டர் பிரியாணி விருந்து.. புகைப்படம் வைரல் !

கஞ்சா கடத்தும் கும்பலுடன் இன்ஸ்பெக்டர் பிரியாணி விருந்து.. புகைப்படம் வைரல் !
X

கஞ்சா கடத்தல் கும்பலோடு அமர்ந்து சொகுசு ஹோட்டலில் பிரியாணி விருந்து சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்திவருவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர், கடற்படையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அவ்வப்போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் போதைபொருளுடன் கைதாகி வருகின்றனர்.

kanja

இதில் தூத்துக்குடி, நாகை, ராமநாதபுரம் கடற்கரையை கடத்தல்கும்பல் பயன்படுத்துகிறது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் நாகையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட தனிப்படை போலீசார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தலில் தொடர்புடைய அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மோகன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலம்புசெல்வன் , நிவாஸ், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன், பாப்பாகோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட 5 பேரை பிடித்த தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

kanja

கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளியான சிலம்புசெல்வன் நண்பர்களோடு காவல் உடை அணிந்த நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி பிரியாணி விருந்தில் பங்கேற்று உள்ளார். கஞ்சா குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல் ஆய்வாளர் கடத்தல் குற்றவாளிகளோடு சொகுசு ஹோட்டலில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it