1. Home
  2. விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு..!!

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா (35). இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி சிறப்பான பங்களிப்பை அளித்த அவர், கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவர், இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஐபிஎல் போட்டியில் 205 ஆட்டங்களில் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய வீரராக அறியப்பட்டார். 2020-ல் சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார் ரெய்னா. இதனால் பெரிய சர்ச்சை ஏற்பட்டது.

Suresh-Raina

அந்த வருடம் சிஎஸ்கே, பிளேஆஃப்புக்கு முதல் முறையாகத் தகுதி பெறவில்லை. கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் மீண்டும் இடம்பெற்றார் ரெய்னா. கோப்பையை வென்றது சிஎஸ்கே. ரெய்னாவை இந்த வருடம் ஏலத்தில் சிஎஸ்கே எடுக்கவில்லை.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்தி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி சுரேஷ் ரெய்னா உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் இந்த முடிவை உத்தரபிரதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவை தவிர தென்னாப்பிரிக்கா, இலங்கை, துபாய் உள்ளிட்ட டி20 தொடர்களிலுள்ள அணிகளுடன் சுரேஷ் ரெய்னா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் வெளிநாட்டு டி20 தொடர்களில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னா தற்போது ரோடு செஃப்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளார். அதன்பின்னர் அவர் தென்னாப்பிரிக்கா அல்லது துபாய் டி20 தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

Trending News

Latest News

You May Like