1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் ..!!

தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் ..!!


இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு;
  • 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும்
  • தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம்; மூன்று நாட்கள் அரசு விழா நடத்தப்படும்
  • மயிலாப்பூர், நெல்லை, தஞ்சை, திருவண்ணாமலைகோயில்களில் மகாசிவராத்திரியன்று மாபெரும் விழா
  • 27 திருக்கோயில்களில் ரூ.60 கோடியில் புதிய திருமண மண்டபங்கள் அமைக்கப்படும்
  • அன்னை தமிழில்அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60% பங்கு தொகை தரப்படும்
  • தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம்
  • ஒரு கால பூஜை திட்டத்தில் நிதி வசதியற்ற மேலும் 2000 கோவில்களுக்கு அரசு மானிய திட்டம் விரிவுபடுத்தப்படும்
  • கோயில்களில் திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் புத்தாடை வழங்கப்படும்
  • ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும்.
  • அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும்.
  • திமுக ஆட்சி முடிவதற்குள் 15 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணி நிறைவடையும்.
  • தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலாச்சார மையம் அமைக்கப்படும்.

Trending News

Latest News

You May Like