1. Home
  2. விளையாட்டு

IPL Mega Auction: அணிகளின் வியூகம் என்னென்ன? ஐபிஎல் ஏலம் முழு விவரம் !!

IPL Mega Auction: அணிகளின் வியூகம் என்னென்ன? ஐபிஎல் ஏலம் முழு விவரம் !!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் ஏலம் பெங்களூரில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இதுகுறித்த முழு விவரங்கள் இங்கே நாம் பார்க்கலாம்..

இது 15-வது ஐபிஎல் ஏலம். 5-வது மெகா ஏலம். இதற்கு முன்பு 2018-ல் மெகா ஏலம் நடைபெற்றது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் ஏலம் நேரலையாக ஒளிபரப்பாகும்.

ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் விவரங்கள்:
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1,214 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 270 வீரர்கள், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகாத 903 வீரர்கள், 41 அசோசியேட் வீரர்கள் பதிவு செய்தார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்பட்டது.

அதன்படி, இறுதி ஏலப் பட்டியலில் உள்ள 590 வீரர்களில் 229 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத 354 வீரர்களும் 7 அசோசியேட் வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.

48 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ. 2 கோடியாக உள்ளது. ரூ. 1.50 கோடி அடிப்படை விலையை 20 வீரர்களும் ரூ. 1 கோடி அடிப்படை விலையை 34 வீரர்களும் தேர்வு செய்துள்ளார்கள்.

IPL Mega Auction: அணிகளின் வியூகம் என்னென்ன? ஐபிஎல் ஏலம் முழு விவரம் !!

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காத பிரபல வீரர்கள் யார் யார்?
10 அணிகளுக்கும் பிசிசிஐ அனுப்பிய வீரர்கள் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் கெயில், மிட்செல் ஸ்டார்க், சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், ஜேமிசன், ஜை ரிச்சர்ட்சன், டேன் கிறிஸ்டியன், ஜோ ரூட், டாம் பேன்டன், மேட் ஹென்ரி போன்ற டி20 பிரபலங்கள் ஏலத்தில் தங்கள் பெயரைக் கொடுக்கவில்லை.

ஐபிஎல் அணிகள் ஏலத்துக்கு முன்பு தக்கவைத்த வீரர்களின் விவரங்கள்:
8 அணிகளும் மொத்தமாக 30 வீரர்களைத் தக்கவைத்துள்ளன. இரு புதிய அணிகளும் தலா மூவரைத் தேர்வு செய்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சா்மா (ரூ. 16 கோடி), பும்ரா (ரூ. 12 கோடி), சூா்யகுமாா் யாதவ் (ரூ. 8 கோடி), பொலாா்ட் (ரூ. 6 கோடி).

சென்னை சூப்பா் கிங்ஸ்: ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ. 12 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி).

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூா்: விராட் கோலி (ரூ. 15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (ரூ. 11 கோடி), முகமது சிராஜ் (ரூ. 7 கோடி).

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகா்வால் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 14 கோடி எடுக்கப்படும்), அா்ஷ்தீப் சிங் (ரூ. 4 கோடி).

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி).

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ. 14 கோடி), பட்லா் (ரூ. 10 கோடி), ஜெய்ஸ்வால் (ரூ. 4 கோடி).

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்: ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்ரவா்த்தி (ரூ. 8 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 12 கோடி எடுக்கப்படும்), வெங்கடேஷ் ஐயா் (ரூ. 8 கோடி), சுனில் நரைன் (ரூ. 6 கோடி).

டெல்லி கேபிடல்ஸ்: ரிஷப் பந்த் (ரூ. 16 கோடி), பிருத்வி ஷா (ரூ. 7.5 கோடி), அக்‌ஷர் படேல் (ரூ. 9 கோடி), நோர்கியா (ரூ. 6.5 கோடி).

IPL Mega Auction: அணிகளின் வியூகம் என்னென்ன? ஐபிஎல் ஏலம் முழு விவரம் !!

ஐபிஎல் அணியில் உள்ள புதிய அணியின் விவரங்களும் அந்த அணிகள் தேர்வு செய்த வீரர்களும்:
ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னோ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. புதிய அணிகளுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் எனப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

லக்னோ அணி கே.எல். ராகுலுக்கு ரூ. 17 கோடி சம்பளம் வழங்குகிறது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகச் சம்பளம் பெறும் வீரர்களில் கே.எல். ராகுலும் ஒருவர். 2018-ல் விராட் கோலியை ரூ. 17 கோடிக்கு ஆர்சிபி அணி தக்கவைத்தது. லக்னெள அணி - ஸ்டாய்னிஸுக்கு ரூ. 9.20 கோடியும் பிஷ்னாய்க்கு ரூ. 4 கோடியும் சம்பளமாக வழங்குகிறது.

ஆமதாபாத் அணி - பாண்டியா, ரஷித் கானுக்குத் தலா ரூ. 15 கோடி சம்பளம் வழங்குகிறது. ஷுப்மன் கில்லுக்கு ரூ. 8 கோடி சம்பளம்.
IPL Mega Auction: அணிகளின் வியூகம் என்னென்ன? ஐபிஎல் ஏலம் முழு விவரம் !!
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் யார் யார்?
ஷாருக் கான், சாய் கிஷோர் போன்ற சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ஐபிஎல் அணிகள் மிகவும் ஆர்வம் காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2022 ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்:
1. ஆர். அஸ்வின் - அடிப்படை விலை ரூ. 2 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் - ரூ. 1.50 கோடி
3. தினேஷ் கார்த்திக் - ரூ. 2 கோடி
4. டி. நடராஜன் - ரூ. 1 கோடி
5. ஷாருக் கான் - ரூ. 40 லட்சம்
6. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
7. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
8. என். ஜெகதீசன் - ரூ. 20 லட்சம்
9. முருகன் அஸ்வின் - ரூ. 20 லட்சம்
10. எம். சித்தார்த் - ரூ. 20 லட்சம்
11. விஜய் சங்கர் - ரூ. 50 லட்சம்
12. ஜி. பெரியசாமி - ரூ. 20 லட்சம்
13. சஞ்சய் யாதவ் - ரூ. 20 லட்சம்
14. சந்தீப் வாரியர் - ரூ. 20 லட்சம்
15. சாய் சுதர்சன் - ரூ. 20 லட்சம்
16. பாபா இந்திரஜித் - ரூ. 20 லட்சம்
17. பாபா அபரஜித் - ரூ. 20 லட்சம்
18. அருண் கார்த்திக் - ரூ. 40 லட்சம்
19. ஆர். சிலம்பரசன் - ரூ. 20 லட்சம்
20. அலெக்ஸாண்டர் - ரூ. 20 லட்சம்
21. எஸ். கிஷன் குமார் - ரூ. 20 லட்சம்
22. முரளி விஜய் - ரூ. 50 லட்சம்
23. ஆர். விவேக் - ரூ. 20 லட்சம்
24. சோனு யாதவ் - ரூ. 20 லட்சம்
25. அதிசயராஜ் - ரூ. 20 லட்சம்
26. வி. கெளதம் - ரூ. 20 லட்சம்
27. எம். முஹமது - ரூ. 20 லட்சம்
28. பிரதோஷ் பால் - ரூ. 20 லட்சம்
29. ஜெ. கெளசிக் - ரூ. 20 லட்சம்
30. நிதிஷ் ராஜகோபால் - ரூ. 20 லட்சம்

ஆரம்பத்தில் ஏலத்துக்கான அடிப்படை விலை - ரூ. 20 லட்சம் என நிர்ணயம் செய்திருந்தார் தமிழக வீரர் ஷாருக் கான். தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகியிருப்பதாலும் தன் மீதான அதிக எதிர்பார்ப்பின் காரணமாகவும் அடிப்படை விலையை ரூ. 40 லட்சமாக உயர்த்தியுள்ளார்.

ஏலத்தில் ஐபிஎல் அணிகள் எத்தனை பேரைத் தேர்வு செய்யலாம்?

ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 பேரையும் அதிகபட்சம் 25 பேரையும் வைத்திருக்க வேண்டும். அதேபோல வீரர்களைத் தேர்வு செய்வதற்காகத் தனக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 90 கோடியிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 67.5 கோடியைச் செலவழித்திருக்க வேண்டும். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

முதல் நாளன்று 161 வீரர்கள் ஏலத்தில் இடம்பெறுவார்கள்.

2-வது நாள் ஏலம் எப்படி நடைபெறும்?

முதல் நாள் ஏலம் முடிவடைந்த பிறகு, மீதமுள்ள வீரர்களில் இருந்து தங்களுக்குத் தேவையான வீரர்களின் பட்டியலை அணிகள் அளிக்க வேண்டும். அந்த வீரர்கள் 2-ம் நாள் ஏலத்தில் இடம்பெறுவார்கள். இதில் தேர்வாகாத வீரர்களையும் பிறகு அணிகள் தேர்வு செய்துகொள்ளலாம். 2018 ஏலத்தில் இருந்தது போன்ற ரைட் டு மேட்ச் கார்டு முறையில் ஒரு வீரரைத் தக்கவைக்கும் நடைமுறை இப்போது இல்லை.

வீரர்களின் ஏலத்தொகை விவரங்கள்:

அதிகபட்சமாக ரூ. 2 கோடியும் குறைந்தபட்சமாக ரூ. 20 லட்சமும் அடிப்படை ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 கோடியை 48 வீரர்கள் (17 இந்தியர்கள், 32 வெளிநாட்டு வீரர்கள்) தேர்வு செய்துள்ளார்கள்.

IPL Mega Auction: அணிகளின் வியூகம் என்னென்ன? ஐபிஎல் ஏலம் முழு விவரம் !!

ஏலத்தில் பங்குபெறும் இள வயது, அதிக வயது வீரர்கள் யார் யார்?

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 17 வயது நூர் அஹமது, இளம் வீரர். பிபிஎல் உள்பட பல டி20 லீக் போட்டிகளில் நூர் விளையாடியுள்ளார். இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை.

சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற 43 வயது இம்ரான் தாஹிர், அதிக வயது கொண்ட வீரராக உள்ளார்.

ஐபிஎல் ஏலத்தை நடத்தப் போகிறவர் யார்?

ஆரம்பம் முதல் ரிச்சர்ட் மேட்லி, ஐபிஎல் போட்டிக்கான ஏல நடத்துநராகப் பணியாற்றினார். 2018 முதல் எட்மியட்ஸ் அப்பணியைத் தொடர்ந்து வருகிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like