1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎல்: கொல்கத்தாவை ஊதி தள்ளியது டெல்லி.. ஆளே இல்லாமல் பந்துவீச வந்த ஷ்ரேயஸ் !

ஐபிஎல்: கொல்கத்தாவை ஊதி தள்ளியது டெல்லி.. ஆளே இல்லாமல் பந்துவீச வந்த ஷ்ரேயஸ் !


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின. டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

பின்ச் 3 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அவர்களை தொடர்ந்து தமிழக வீரர் பாபா இந்திரஜித் 6 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பவல்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஐபிஎல்: கொல்கத்தாவை ஊதி தள்ளியது டெல்லி.. ஆளே இல்லாமல் பந்துவீச வந்த ஷ்ரேயஸ் !

அதே ஓவரில் குல்தீப் வீசிய அடுத்த பந்தில் நரேன் டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடி வீரர் ரசல் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் குல்தீப் சுழலில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

மறுபுறம் அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 57 ரன்கள் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ரிங்கு சிங் 23 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது.

டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

ஐபிஎல்: கொல்கத்தாவை ஊதி தள்ளியது டெல்லி.. ஆளே இல்லாமல் பந்துவீச வந்த ஷ்ரேயஸ் !

இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் பிரத்வி ஷா டக் அவுட்டானார். நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த பிரித்வி ஷா முதல் பந்திலே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டேவிட் வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். மார்ஷ் 13 ரன்னுக்கும், லதித் யாதவ் 22 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பந்த் 2 ரன்னுடன் வெளியேறினார்.

அக்சர் படேல் 24 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. அணியின் நம்பிக்கையாக இருந்த பவல் - தாக்குர் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பாவல் 16 ரன்களில் 33 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


newstm.in

Trending News

Latest News

You May Like