தங்கம் விலை கூடினாலும் கவலையில்லை.. நேற்று டன் கணக்கில் விற்பனை

தங்கம் விலை கூடினாலும் கவலையில்லை.. நேற்று டன் கணக்கில் விற்பனை

தங்கம் விலை கூடினாலும் கவலையில்லை.. நேற்று டன் கணக்கில் விற்பனை
X

அட்சய திருதியை நாளான நேற்று தமிழகம் முழுவதும் 18 டன் தங்கம் விற்பனையாகி உள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது. அட்சயா என்ற சொல்லுக்கு எப்போதும் குறையாது என பொருள் கூறப்படுகிறது. இந்நாளில் தங்கம், வெள்ளி, வீட்டு மனைகள், நவரத்தின கற்கள் போன்றவற்றை வாங்குவது, முதலீடு செய்வது சிறப்பு என்று நம்பிக்கை உள்ளது. ட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இதன் காரணமாக, அட்சய திருதியை அன்று பொதுமக்களில் பலா் சிறிதளவேனும் தங்கம் வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என ஆர்வம் காட்டுவர்.

gold

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நகைகளை வாங்க மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் அட்சய திருதியை நாளான நேற்று, நாடு முழுவதும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து நகை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். சிலர் ஒரு கிராம் காசாவது வாங்கிச் சென்றனர்.

gold

இதனால் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 18 டன் தங்கத்தை மக்கள் வாங்கி குவித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டை விட 30% கூடுதல் விற்பனை என தங்க நகை விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.சாதாரணமாக தினசரி 7 முதல் 8 டன் வரையில் தங்கம் விற்பனையாகும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தை விட ஒப்பிடும் போது, இம்மாதம் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் காரணமாகவும் விற்பனை அதிகரித்துள்ளது.

newstm.in

Next Story
Share it