Logo

வரலாற்று சாதனை... ஒரே போட்டியில் 26 சிக்ஸர், 36 பவுண்டரி...மொத்தம் 498 ரன்கள்..!!

 | 

இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இரு அணிகள் பங்கேற்றுள்ள முதல் ஒருநாள் போட்டியில் ஆம்ஸ்டெல்வீன் நகரில் உள்ள வி ஆர் ஏ மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜேசன் ராய் ஒரு ரன்னுடன் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட், சர்வதேச போட்டியில் தமது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர்,

93 பந்துகளில் 122 ரன்களை குவித்தார். மற்றொரு வீரர் டேவிட் மாலன் 109 பந்துகளில் 125 ரன்கள் அடித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த பட்லர், 7 பவுண்டர்கள் மற்றும் 14 சிக்சர்களை அடித்து இங்கிலாந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 

கேப்டன் மோர்கன் டக் அவுட் ஆனார். லிவிங்ஸ்டோன் 66 ரன்கள் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2018 வாக்கில் 481 ரன்களை குவித்திருந்தது. அதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று வரை ஒரே இன்னிங்ஸில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ரன்களாக. இப்போது அதனை இங்கிலாந்து அணியே தகர்த்துள்ளது.இந்த போட்டியில் ஓவருக்கு 9.96 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை குவித்தது இங்கிலாந்து. 26 சிக்ஸர்கள் மற்றும் 36 பவுண்டரிகள் இதில் அடங்கும்.   
 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP