வேலூர் டூ சென்னைக்கு 95 நிமிடங்களில் சென்ற இதயம்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு !

வேலூர் டூ சென்னைக்கு 95 நிமிடங்களில் சென்ற இதயம்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு !

வேலூர் டூ சென்னைக்கு 95 நிமிடங்களில் சென்ற இதயம்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு !
X

வேலூரில் இருந்து சென்னைக்கு இதயம் ஒன்று மிகவும் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் 95 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டது.

வேலூரைச் சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் சிக்கியதால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அந்த இளைஞர் மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர்.

dr

இதனையடுத்து இளைஞரின் இதயம் தானமாகத் பெறப்பட்டதை அடுத்து அந்த இதயம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஒருவருக்கு தேவைபட்டது. எனினும் குறுகிய காலத்தில் அந்நபருக்கு இதயத்தை பொருத்தினால் தான் முடிவு சரியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.

இதனையடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்னைக்கு இதயம் எடுத்து வரப்பட்டது. வேலூரில் இருந்து சென்னை வரை போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஆம்புலன்சுக்கு அனைத்து வாகனங்களும் வழி விட ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் அதாவது 95 நிமிடத்தில் வேலூரில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தது.

dr

இதனை அடுத்து இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .இதனை அடுத்து போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது அதேநேரத்தில் குறித்த நேரத்தில் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் அனைத்தையும் சமாளித்து சாலையில் மின்னல் வேகத்தில் பறந்து சென்னைக்கு இதயத்தை கொண்டுவந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

newstm.in

Next Story
Share it