ஹேப்பி நியூஸ்! இன்றும் குறைந்த தங்கம் விலை!!

ஹேப்பி நியூஸ்! இன்றும் குறைந்த தங்கம் விலை!!

ஹேப்பி நியூஸ்! இன்றும் குறைந்த தங்கம் விலை!!
X

தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் இறக்கத்துடனே தொடங்கிய நிலையில், நான்காவது நாளான இன்றும் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4837 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4862 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 25 குறைந்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,896-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 200 குறைந்து ரூ.38,696-க்கு விற்பனையாகிறது.

gold silver

தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது.நேற்று மாலை நிலவரப்படி வெள்ளியின் விலை ரூ. 69.80-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ. 1.00 குறைந்து ரூ. 68.80 விற்பனை செய்யப்படுகின்றது.

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 200 விலை குறைந்துள்ளது.

newstm.in

Next Story
Share it