பெரும் சோகம்.. இன்று தேர்வு எழுத இருந்த பிளஸ்-2 மாணவி திடீர் தற்கொலை

பெரும் சோகம்.. இன்று தேர்வு எழுத இருந்த பிளஸ்-2 மாணவி திடீர் தற்கொலை

பெரும் சோகம்.. இன்று தேர்வு எழுத இருந்த பிளஸ்-2 மாணவி திடீர் தற்கொலை
X

இன்று பொதுத்தேர்வு எழுத இருந்த பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் தாதம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த தாய், தந்தையை இழந்த சிறுமி பிரகதி (17), அத்தை வீட்டில் வசித்து வந்தார். அவர்களது வீட்டில் இருந்தே சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

அவர், இன்று (வியாழக்கிழமை) பிளஸ்-2 தேர்வு எழுத இருந்தார். இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரகதி நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த அத்தை சாந்திராஜா வீட்டிற்கு வந்தார். அப்போது பிரகதி, அவர் தங்கி இருந்த அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. சாந்திராஜா சத்தம் கொடுத்து அழைத்தும் பதில் இல்லாததால் சந்தேகம் அடைந்த சாந்திராஜா, பிரகதி தங்கி இருந்த அறைக்கு எட்டிப்பார்த்தப்போது அங்கு அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

zds

இதுகுறித்து அவர் வீராணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இன்று தேர்வு எழுத இருந்த நிலையில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it