பெரும் அதிர்ச்சி.. மாமூல் தரமறுத்த மருந்துக் கடை உரிமையாளர் அடித்துக் கொலை

பெரும் அதிர்ச்சி.. மாமூல் தரமறுத்த மருந்துக் கடை உரிமையாளர் அடித்துக் கொலை

பெரும் அதிர்ச்சி.. மாமூல் தரமறுத்த மருந்துக் கடை உரிமையாளர் அடித்துக் கொலை
X

மாமூல் தர மறுத்த மருந்து விற்பனைக் கடை உரிமையாளரை ரவுடி கும்பல் அடித்துகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரப்பன் மகன் நாகராஜன்(44) என்பவர், அதே ஊரில் மருந்துக் கடை நடத்தி வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்(29), ரகுநாத்(23). இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், பிரபாகரன் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் நாகராஜனின் கடைக்கு வந்த பிரபாகரன், ரகுநாத் ஆகிய இருவரும் நாகராஜனை மிரட்டி மாமூல் வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வந்து, நாகராஜனிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவிக்கின்றனர். அப்போது அவர் மாமூல் தர மறுத்ததால் ஆயுதங்களால் தலையில் தாக்கிவிட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

j

இதையடுத்து, நாகராஜன் வீட்டுக்குச் சென்ற நிலையில் அங்கு மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் உடனடியாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாகராஜனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவுடிகள் பிரபாகரன், ரகுநாத் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it