பெரும் பரபரப்பு.. காவலர் குடியிருப்பில் பெண் எஸ்.ஐ சடலமாக மீட்பு !!

பெரும் பரபரப்பு.. காவலர் குடியிருப்பில் பெண் எஸ்.ஐ சடலமாக மீட்பு !!

பெரும் பரபரப்பு.. காவலர் குடியிருப்பில் பெண் எஸ்.ஐ சடலமாக மீட்பு !!
X

காவலர் குடியிருப்பில் பெண் எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் மோகன்கஞ்ச் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ரேஷ்மி (33) என்ற பெண் எஸ்.ஐ ஆக பணிபுரிந்து வந்தவர். இவர் துடிப்பான காவல் அதிகாரியாக வலம் வந்துள்ளார். ரேஷ்மி தான் பணிபுரியும் போலீஸ் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல நேற்று பணி செய்துவிட்டு மதியம் காவலர் குடியிருப்புக்கு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் ரேஷ்மி மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு திரும்பிசெல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக போலீசார் ரேஷ்மி தங்கியுள்ள காவலர் குடியிருப்பின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

suicide

வீட்டின் கதவு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்துள்ளனர். அங்கு உள்ள ஒரு அறையில் ரேஷ்மி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார் ரேஷ்மியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரேஷ்மி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் எஸ்.ஐ மரண சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போனை மீட்டு ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

suicide

இதனிடையே, தனது மகள் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை , கொலை செய்யப்பட்டதாக ரேஷ்மியின் தந்தை புகார் அளித்துள்ளார். காவல்நிலையத்தில் சிலருடன் ஏற்பட்ட தகராறால் அவர் வேறு போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று செல்ல தயாராகி வந்ததாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it