1. Home
  2. வர்த்தகம்

அரசு ஊழியர்கள் ஹெச்டிஎப்சி வங்கியில் எந்த வங்கிக் கணக்கும் வைக்கக் கூடாது..!!

அரசு ஊழியர்கள் ஹெச்டிஎப்சி வங்கியில் எந்த வங்கிக் கணக்கும் வைக்கக் கூடாது..!!

பஞ்சாப் மாநில அரசின் நீர்வளத்துறை இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில் நீர்வளத் துறையின் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் உள்பட மூத்த அதிகாரிகளுக்கு மெமோ ஒன்றை அனுப்பி உள்ளது. இதில் அனைத்து ஊழியர்களும் எச்டிஎஃப்சி வங்கியின் கணக்குகளை உடனடியாக மூடிவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

22 ஆகஸ்ட் 2022 தேதியிட்ட முதன்மை செயலாளர் நீர்வளத்துறை அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹெச்டிஎப்சி வங்கியின் கணக்குகளை மூடுவதற்கு அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கும் கோரிக்கையுடன் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு நகல் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து நிர்வாகச் செயலர்களுக்கும் மெமோ அனுப்பப்பட்டுள்ளது.

பஞ்சாப் அரசு எச்டிஎஃப்சி வங்கி மீது இந்த அளவு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு காரணம் என்னவென்றால், பஞ்சாப் நீர்வளத்துறைக்கு எச்டிஎஃப்சி வங்கி ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே தான் அந்த வங்கியில் அரசு ஊழியர்கள் யாரும் கணக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எச்டிஎஃப்சி வங்கி பஞ்சாப் மாநில நீர்வளத்துறையின் சுரங்க ஒப்பந்ததாரர்களுக்கு சில உத்தரவாதங்களை வழங்கியதாகவும், ஆனால் அந்த உத்தரவாதங்களை ​​எச்டிஎஃப்சி வங்கி பின்பற்றவில்லை என்றும், அதனால் தான் இந்த நடவடிக்கை என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில ஊழியர்கள் ஹெச்டிஎப்சி வங்கியில் தங்கள் சம்பளக் கணக்கைத் திறந்திருந்தால், அவர்கள் வற்புறுத்தப்பட்டு, துறையின் நலன் கருதி ஹெச்டிஎப்சி வங்கியில் தங்கள் கணக்குகளை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like