குட் நியூஸ்.. இவர்களின் ஊதியம் உயர்வு.. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!

குட் நியூஸ்.. இவர்களின் ஊதியம் உயர்வு.. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!

குட் நியூஸ்.. இவர்களின் ஊதியம் உயர்வு.. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!
X

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கு 500 ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 6,715 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரம் விற்பனையாளர்கள், 3,900 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24,800-க்கும் அதிகமான பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு 2022 ஏப்ரல் மாதம் முதல் 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு 16.67 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும் குறிப்பிட்டார்.
Next Story
Share it