1. Home
  2. லைப்ஸ்டைல்

பென்ஷன் பெறுவோருக்கு குட் நியூஸ்.. வெளியான புதிய அறிவிப்பு..!

பென்ஷன் பெறுவோருக்கு குட் நியூஸ்.. வெளியான புதிய அறிவிப்பு..!

இந்தியாவில், ஓய்வூதியம் பெறும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

தற்போது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிருடன் இருப்பதற்கான ஆவணம் ஆயுள் சான்றிதழ் ஆகும். இது, அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய விநியோகஸ்தர், வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற ஏஜென்சியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், ஓய்வூதியம் பெறுபவரின் பணியிடத்தில் அவரது மரணத்திற்குப் பிறகு பணம் செலுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. பொதுவாக, ஓய்வூதியம் பெறும் நபர், ஆயுள் சான்றிதழை வழங்க நிறுவனத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்.

இருப்பினும், முதியவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இது, ஓய்வூதியம் வழங்குவதற்கு போதுமான ஆதாரமாகக் கருதப்படுகிறது.

ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை https://jeevanpramaan.gov.in/ என்ற ஜீவன் பிரமான் இணையத்திலோ அல்லது செயலி மூலமாகவோ ஆண்டு முழுவதும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு குட் நியூஸ்...! இனி இந்த ஆவணத்தை எப்பொழுது  வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்...! வெளியான புதிய அறிவிப்பு...! | Tamil ...

Trending News

Latest News

You May Like