1. Home
  2. தமிழ்நாடு

இல்லதரிசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!! சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 15 ரூபாய் குறைந்தது!!

இல்லதரிசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!! சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 15 ரூபாய் குறைந்தது!!


இந்தியாவில் சமையல் எண்ணெய் 55 சதவீதத்துக்கும் அதிகமாக இறக்குமதியைத்தான் நம்பி உள்ளது.

சமீபத்தில் இந்தோநேஷியா பாமாயில் ஏற்றுமதியைத் தடை செய்ததும், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாகவும் சமையல் எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் உயர்ந்து வருகிறது.

Palm-oil

இந்நிலையில், சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததையொட்டி, இந்தியாவிலும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. பாமாயில் விலை லிட்டருக்கு 8 ரூபாயும், சூரியகாந்தி எண்ணெய் விலை 15 ரூபாயும், சோயா எண்ணெய் விலை 5 ரூபாயும் குறைந்துள்ளது.

சமீபத்திய வாரங்களில், அர்ஜென்டினா மற்றும் ரஷ்யா போன்ற பிற நாடுகளில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் தொடங்கியது, இது சில விலைக் குறைப்புகளுக்கு வழிவகுத்தது. மத்திய அரசின் தலையீடு, கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான தொடர் வரி குறைப்பு, சூரியகாந்தி எண்ணெய் விலையை குறைக்க உதவியது.

RussiaUkraine-Crisis-Edible-oil-prices-to-surge

இந்தியா அதன் பாமாயில் தேவையில் 45 சதவீதம் இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை உயர்ததையடுத்து இந்தோனேஷியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால், சமையல் எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like