1. Home
  2. தமிழ்நாடு

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..!

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..!


உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்கத்தால் கச்சா எண்ணெய், தங்கம் விலைகள் கடுமையாக உயர்ந்தது. பங்குச்சந்தைகள் சரிவடைந்தன.

இந்நிலையில், தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி ரூ. 39,672-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 112 குறைந்து ரூ.39,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து, ரூ.4,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.60-க்கு விற்பனையான நிலையில் இன்று 1.00 காசுகள் குறைந்து ரூ. 71.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like