பக்தர்களுக்கு நற்செய்தி.. திருப்பதி தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. திருப்பதி தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. திருப்பதி தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு..!
X

கொரோனா மூன்றாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளை (24-ம் தேதி) முதல், வரும் 28-ம் தேதி வரை தினமும் 13 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் ரூ.300 சிறப்பு தரிசன கூடுதல் டிக்கெட்டுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, இன்று (23-ம் தேதி) காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளது.

தற்போது, திருப்பதியில் பூதேவி காம்ப்ளக்ஸ், நிவாசம், கோவிந்தராஜ சுவாமி பக்தர்கள் தங்கும் விடுதிகளில் தினமும் 15000 சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இது, வரும் 26, 27 மற்றும் 28-ம் தேதிகளுக்காக கூடுதலாக மேலும் 5 ஆயிரம் டோக்கன் என மொத்தம் தினசரி 20 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும், வரும் மார்ச் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு ஆன்லைன் டிக்கெட்டுகள் தினசரி 25,000 வீதம் இன்று (23-ம் தேதி) காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it