பக்தர்களுக்கு நற்செய்தி.. இன்றுமுதல் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. இன்றுமுதல் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. இன்றுமுதல் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்..!
X

திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்று முதல் ஆன்லைனில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில், உலகப் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பரவல் கணிசமாக குறைந்து விட்டதால் பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தானம் படிப்படியாக அனுமதி அளித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது, மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மீண்டும் முன்னுரிமை தரிசன டிக்கெட் வசதியை ஏற்படுத்தி கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்று (26-ம் தேதி) முதல் ஆன்லைனில் பெறலாம்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it