பக்தர்களுக்கு நற்செய்தி.. இனி, 24 மணி நேரமும் பசியாறலாம்..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. இனி, 24 மணி நேரமும் பசியாறலாம்..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. இனி, 24 மணி நேரமும் பசியாறலாம்..!
X

கொரோனா தொற்று பரவல் குறைவு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தினமும் திருப்பதிக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் அனைவரும் சுமார் 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

இதனால், பக்தர்களின் நலன் கருதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் மற்றும் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் விஐபி பிரேக் தரிசனம் தொடர் விடுமுறை நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு காத்திருப்பு அறைகளில் அத்தியாவசிய பொருட்கள் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்களின் வருகைக்கு தக்கவாறு லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருமலை அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Next Story
Share it