1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

குட் நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!


தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 9,494 ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்34 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 2022 - 23ஆம் கல்வியாண்டில் 7,500 திறன் வகுப்பறைகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்றார்.

குட் நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

மேலும் 7 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திலான பள்ளிகள் சென்னையில் அமைக்கப்படும் என்றும், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அரசு பள்ளிகளில் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

அதே போல் சிறப்பாக செயல்படும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர், மாணவர்களின் உடல்நலன் காக்க சிறப்பு பயிற்சிகளும், மனநலம் காக்க விழிப்புணர்வு வாரமும் நடத்தப்படும் என்று கூறினார்.

குட் நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

இவற்றுடன் `ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 15,000 இடங்கள் நிரப்பப்படும். அவற்றில் முதற்கட்டமாக இந்த ஆண்டு 9,000 பேர் பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like