Logo

சோனியா காந்தியின் சுவாசப் பாதையில் பூஞ்சை தொற்று!!

 | 

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மூச்சுக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஜூன் 2 கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்

கோவிட் பாதிப்பு தொடர்பான பிரச்னைகளில் அவதியுற்று வந்த அவருக்கு திடீரென மூக்கில் இருந்து அதிகளவில் ரத்த கசிவு ஏற்பட்டதால் 12ஆம் தேதி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

sonia gandhi

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியா காந்தியின் சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுவாச பாதையில் ஏற்பட்ட பூஞ்சை பாதிப்பில் இருந்து சோனியா காந்தி மீண்டு வருவதாக கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. சோனியா காந்தியை மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து அவரை கவனித்து வருகின்றனர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP