Logo

இனிமேல் ஒரு தொகுதிதான்.. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஆப்பு..!

 | 

தேர்தலின்போது ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. இதையடுத்து, 1996ல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, ஒரு வேட்பாளர் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை உருவானது.

‘இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர், இரண்டிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. எனவே, அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகிறது.

இதனால், பணம் மற்றும் நேர விரயம் ஏற்படுவதோடு, மக்கள் தீர்ப்புக்கும் மரியாதை இல்லாமல் போகிறது. எனவே, ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும்’ என, 2004ல் தேர்தல் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதில் தீர்வு எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் சமீபத்தில் மத்திய சட்டத்துறை செயலரை சந்தித்தார். அப்போது, 2004ல் முன்மொழியப்பட்ட சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

அப்போது, “ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடக் கூடாது என சட்ட திருத்தம் மேற்கொள்ள முடியாவிட்டால், இரண்டு தொகுதியில் வென்று, ஒன்றில் ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கான செலவை ஈடு செய்யும் அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டும்” என, தேர்தல் கமிஷனர் கோரிக்கை விடுத்தார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP