காதலிக்க கட்டாயப்படுத்துகிறார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்.. இயக்குநர் கைது..!

காதலிக்க கட்டாயப்படுத்துகிறார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்.. இயக்குநர் கைது..!

காதலிக்க கட்டாயப்படுத்துகிறார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்.. இயக்குநர் கைது..!
X

தனுஷ் நடித்த ‘அசுரன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள திரையுலகில் முன்னணி நடிகையான இவர், நடிகர் திலீப்பை திருமணம் செய்துகொண்டார். பின்னர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

அதன்பின்பு தனியாக வசித்து வந்த மஞ்சு வாரியரை காணவில்லை என்றும், அவர் சிலரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மலையாள இயக்குனர் சனல்குமார் சசிதரன் என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இயக்குனர் சனல்குமார் சசிதரனின் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, ‘மஞ்சு வாரியர் எங்கே..?’ என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் கொச்சி போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், சனல்குமார் சசிதரன் இயக்கிய ‘கயட்டம்’ படத்தின் படபிடிப்பின் போதே அவர் என்னை காதலிப்பதாக கூறினார். அதனை நான் ஏற்க மறுத்தேன்.

அதன்பிறகும் அவர் என்னை காதலிப்பதாக கூறி தொலைபேசியில் பேசினார். அதனையும் நான் கண்டித்தேன். அதன் பின்பும் அவர் விடாமல் தன்னை காதலிக்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் மூலம் கருத்து பதிவிட்டு வந்தார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் அவரது பதிவுகளை கண்டு கொள்ளாமல் இருந்தேன். அதன்பிறகும் அவர் என்னை தொந்தரவு செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் நேற்று, எர்ணாகுளம் போலீசார் இயக்குனர் சனல்குமார் சசிதரனை கைது செய்தனர்.
Next Story
Share it