நெகிழ்ச்சி..!! இறப்பிலும் இணைபிரியாத கணவன் - மனைவி..!!

நெகிழ்ச்சி..!! இறப்பிலும் இணைபிரியாத கணவன் - மனைவி..!!

நெகிழ்ச்சி..!! இறப்பிலும் இணைபிரியாத கணவன் - மனைவி..!!
X

சிவகங்கை புதுவாழ்வு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 70). இவர் ரானுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் மனைவி சரஸ்வதி (வயது 55) அன்னியோன்யமாக வாழ்ந்து வந்த தம்பதியர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.

நேற்று மாலை சக்திவேல் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த மனைவி, கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல் மயங்கிய நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.

அடுத்தடுத்து கணவன், மனைவி உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் பொதுமக்கள் அஞசலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அவர்களின் உடல்களுக்கு அஞசலி செலுத்தி வருகின்றனர். இறப்பிலும் இணைபிரியாமல் தம்பதிகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it