பெண் எஸ்.ஐ.யின் கழுத்தறுப்பு வழக்கு.. கைதான ஆறுமுகம் கழிவறையில் வழுக்கி விழுந்து கை எலும்பு முறிவு !!

பெண் எஸ்.ஐ.யின் கழுத்தறுப்பு வழக்கு.. கைதான ஆறுமுகம் கழிவறையில் வழுக்கி விழுந்து கை எலும்பு முறிவு !!

பெண் எஸ்.ஐ.யின் கழுத்தறுப்பு வழக்கு.. கைதான ஆறுமுகம் கழிவறையில் வழுக்கி விழுந்து கை எலும்பு முறிவு !!
X

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதனையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவும் பாதுகாப்பு பணியில் இருந்தார். இவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த ஆறுமுகம் என்ற நபர், உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். கடந்த மாதம் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தனக்கு அபராதம் விதித்தது குறித்து உதவி காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

arrested
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நேரத்தில் ஆறுமுகம் தன் கையில் வைத்திருந்த கத்தியால் உதவி காவல் ஆய்வாளர் மார்க்கெட் தெரசாவை தாக்கியுள்ளார். இதில் அவரது கழுத்தில் அறுத்து காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின்போது அருகில் இருந்த மற்ற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காவல் ஆய்வாளரை மீட்டு உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், காவலரை தாக்கிய ஆறுமுகத்தை காவல்துறையினர் அப்போதே கைது செய்தனர். காயமடைந்த காவல்துறை அதிகாரிக்கு நிதியுதவி அறிவித்து, உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருந்தார். மேலும் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

arrested

இந்த நிலையில், உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய ஆறுமுகம் காவல்துறை விசாரணையின்போது காவல் நிலையத்தில் இருந்த கழிவறையில் வழுக்கி விழுந்ததால் வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

newstm.in

Next Story
Share it