முடிவுக்கு வந்தது பாமாயில் அச்சம்..!

முடிவுக்கு வந்தது பாமாயில் அச்சம்..!

முடிவுக்கு வந்தது பாமாயில் அச்சம்..!
X

சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத என அனைத்து வகையான பாமாயில் ஏற்றுமதியையும் தடை செய்யப் போவதாக கடந்த வாரம் இந்தோனேசியா அறிவித்தது. இதனால், இந்தியாவில் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயரும் அச்சம் எழுந்தது.

ஏனெனில், இந்தியா அதிக அளவில் இறக்குமதி மூலம் பாமாயில் தேவையை நிறைவு செய்து வருகிறது. இதில் 45 சதவீதம் இந்தோனேசியாவில் இருந்தும், 55 சதவீதம் மலேசியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தனது முடிவை மாற்றிக் கொண்ட இந்தோனேசியா, சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஏற்றுமதியைத் தொடர இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் பாமாயில் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் விலகியது.

ஏனெனில், இந்தியாவில் சுத்திகரிக்கப்படாத பாமாயில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இந்தியாவில் உள்ள பாமாயில் சுத்திகரிப்பு ஆலைகள் இனி கூடுதல் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஏற்றுமதியை நிறுத்தப் போவதில்லை என்று இந்தோனேசியா அறிவித்துள்ளதன் மூலம், இந்தியாவில் பாமாயில் தட்டுப்பாடு ஏற்படும் என்று எழுந்த அச்சம் முடிவுக்கு வந்தது.

Next Story
Share it