1. Home
  2. தமிழ்நாடு

தேர்வு பயமா?? முதல் நாளில் 32,674 மாணவர்கள் ஆப்சென்ட்..!!

தேர்வு பயமா?? முதல் நாளில் 32,674 மாணவர்கள் ஆப்சென்ட்..!!


தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது.

மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள் ஆவர். 4,68,587 மாணவிகள் ஆவர். வருகிற 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில், 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சந்திக்காத மாணவர்கள் தான் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். இதனிடையே தேர்வு பயம் காரணமாக சேலத்தில் 2 மாணவர்கள், மதுரையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மொழிப்பாட தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு எழுத விண்ணப்பித்த 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவியர்களில் 32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வின் முதல் நாளிலேயே 32 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருந்துள்ள தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லையா? என்பன போன்ற கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like