பிரபல ரவுடிக்கு தூக்கு.. கும்பகோணம் கோர்ட் அதிரடி..!

தஞ்சை பகுதியில் பிரபலமானவர் கட்டை ராஜா. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில், கடந்த 2013-ம் ஆண்டு செந்தில்நாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் ரவுடி ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் கைது செய்யப்பட்ட கட்டை ராஜா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், அவர் மீதான வழக்கு விசாரணை கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், செந்தில்நாதன் கொலை வழக்கில் ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளி செல்வத்திற்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் விரைவு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் ஜோசப் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். அவர் வழங்கி உள்ள தீர்ப்பில், கட்டை ராஜாவின் கூட்டாளிகளான தாய்மாமன் ஆறுமுகம் மற்றும் தம்பி செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.