#BREAKING:- பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்..!

#BREAKING:- பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்..!

#BREAKING:- பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்..!
X

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசாத் ரவூப் லாகூரில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66.

ஆசாத் ரவூப், 2000-ம் ஆண்டில் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 2005-ம் ஆண்டு தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் நடுவராக பணியாற்றினார். 2006-ம் ஆண்டில், ஐசிசியின் எலைட் பேனலில் இடம் பெற்ற அவர், அதில் 2013 வரை அங்கம் வகித்தார்.
Pakistani umpires were instrumental to IPL's success: Asad Rauf
அத்துடன் அவர், 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 28 டி20 போட்டிகள் மற்றும் 11 பெண்கள் டி20 போட்டிகளில் நடுவராகவும், ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகள், 26 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆசாத் ரவூப் மரணம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஆசாத் ரவூப், மரணமடைந்ததாக வந்த செய்தி வருத்தமளிக்கிறது.

அவர் ஒரு சிறந்த நடுவர் மட்டுமல்ல, நல்ல நகைச்சுவையாளரும் கூட. அவர் எப்போதும் என் முகத்தில் புன்னகையை வரவழைப்பார். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it