பிரபல தமிழ் நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல தமிழ் நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல தமிழ் நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
X

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.

சலீம் கவுஸ், ‘வெற்றிவேல்’ என்ற படத்தில் ஜிந்தா எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அட்டகாசமான நடிப்பாலும், வித்தியாசமான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

கமலுடன் ‘வெற்றி விழா’, கார்த்திக்குடன் ‘சீமான்’, சத்யராஜுடன் ‘மகுடம்’, பிரபுவுடன் ‘தர்மசீலன்’, பிரசாந்துடன் ‘திருடா திருடா’, சரத்குமாருடன் ‘சாணக்கியா’, அஜித்துடன் ‘ரெட்’, விஜய்யுடன் ‘வேட்டைக்காரன்’ விஜயகாந்துடன் ‘சின்னக் கவுண்டர்’ என, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அஜித், விஜய் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் காலமானார்! - லங்காசிறி நியூஸ்
அத்துடன், ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சலீம் கவுஸ்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சலீம் கவுஸ் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவு ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சலீம் கவுஸ் மும்பையைச் சேர்ந்தவர் என்று சினிமா வட்டாரங்களால் முத்திரை பதித்தனர். ஆனால் இவர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் பிறந்தவர் என்றும், அக்மார்க் தமிழன் என்றும் கூறப்படுகிறது. இவர் திரைப்படங்களில் நடிக்க தனக்காக போய் வாய்ப்பு கேட்பதில்லையாம்.
வேத நாயகத்தை தட்டிக்கழித்த இயக்குனர்கள்.. பயன்படுத்திக் கொள்ளாத தமிழ்  சினிமா - Cinemapettai
இந்தக் கதாபாத்திரத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர்கள் அழைத்தால் மட்டுமே நடிப்பாராம். சலீம் கவுஸ் நிதானமான நடிப்பும், வில்லத்தனமான சிரிப்பும், தீர்க்கமான முகமும், வில்லனுக்கு உண்டான உடல்மொழியும் உடைய இவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நடிகர் சலீம் கவுஸ் மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it