பிரபல மலையாள நடிகை ராஷ்மி ஜெயகோபால் காலமானார்..!!

பிரபல மலையாள நடிகை ராஷ்மி ஜெயகோபால் காலமானார்..!!

பிரபல மலையாள நடிகை ராஷ்மி ஜெயகோபால் காலமானார்..!!
X

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த ராஷ்மி ஜெயகோபால், வணிக விளம்பரங்கள் மூலம் நடிகையாக அறிமுகமானார். ராஷ்மி ஜெயகோபாலின் முதல் சீரியல் அமிர்தா டிவியில் ஒளிபரப்பான ‘சத்யம் சிவம் சுந்தரம்’. ‘பனே சுஜாதா’ சீரியலில் ‘சாரம்மா’ கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பமானவர் ராஷ்மி ஜெயகோபால்.

Rashmi-Jayagopal

மலையாளத்தில் ‘ஒரு நல்ல கோட்டையம்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷ்மி ஜெயகோபால், தமிழிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இவருக்கு கணவர் ஜெயகோபால் மற்றும் மகன் பிரசாந்த் கேசவா உள்ளனர்.

RIP

‘ஸ்வந்தம் சுஜாதா’ படத்தின் நாயகி சந்திரா லக்ஷ்மன், ராஷ்மி ஜெயகோபாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதான் நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. எங்கள் அன்பான ராஷ்மி அக்காவும், அண்ணியும் தங்கள் அன்புக்குரிய கிருஷ்ணனுடன் இருக்கச் சென்றுள்ளனர் என்று சந்திர லக்ஷ்மன் எழுதியுள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it