பரபரப்பு! இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை!!

பரபரப்பு! இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை!!

பரபரப்பு! இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை!!
X

சென்னை அம்பத்தூர் அருகே பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அவரது தம்பி வெங்கடேஷ் ஆகிய இருவரும் சகோதரர்கள். சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷிடம், லாசர் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் சேர்ந்து செல்ஃபோன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டதாக தெரிகிறது.

அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேஷ் இருவரையும் தாக்கியுள்ளார். இதன் காரணமாக தம்பி வெங்கடேஷை கொல்ல திட்டம் தீட்டி தாக்குதல் நடத்தியபோது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கண்டதும் தம்பி வெங்கடேஷ் தப்பியோட அண்ணக் கார்த்திக்கை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

murder

இந்த சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக் உடலை கைப்பற்றிய போலீசார், கொலையாளிகளை தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

குற்றவாளிகள் திருவேற்காட்டில் ஒரு ஓட்டலில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அதிரடியாக லாசர், சண்முகம், நரேந்திரன், சிறுவன் ஒருவர் உள்பட 10 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it