பரபரப்பு! பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!!

பரபரப்பு! பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!!

பரபரப்பு! பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!!
X

நடிகர் விஜய் பாபு தன்னை ஒரு மாதத்திற்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள திரையுலகின் பெண் நடிகை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண்கள் என்ற பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் குழுவில் நடிகையும் பாதிக்கப்பட்டவருமான அந்த பெண் தான் சந்தித்த பாலியல் வன்கொடுமையின் விவரங்களை விரிவாகக் கூறியுள்ளார். விஜய் பாபுவை சில ஆண்டுகளாகத் தெரியும் என்றும், அவருடன் ஒரு திரைப்படத்தில் ஒன்றாகப் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சரியான வழிகாட்டுதலின்றி திரைப்படத்துறையில் புதுமுகமாக தான் அவதிப்பட்டப்போது, அந்த நேரம் முழுவதும் விஜய் பாபு தன்னிடம் நட்பாக பழகி, தனக்கு அறிவுரை கூறி தன் நம்பிக்கையை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

VijayBabu

மலையாள திரையுலகில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் பாபு இந்த ஆண்டு மார்ச் 13 முதல் ஏப்ரல் 14 வரை தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால், விஜய் பாபு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தன் மீது குற்றம் சாட்டிய பெண் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும், அவரை அவ்வளவு எளிதில் விடமாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it