பரபரப்பு! பட்டப்பகலில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து!!

பரபரப்பு! பட்டப்பகலில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து!!

பரபரப்பு! பட்டப்பகலில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து!!
X

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஆசிக் என்ற இளைஞர் மாணவியை கத்தியால் குத்தி உள்ளார். மாணவி வலி தாங்க முடியாமல் துடித்து கதறியுள்ளார். படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

crime

மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற ஆசிக் என்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 26 வயதான ஆசிக் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

aasiq

குன்னூர் நகர் பகுதியில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது கொலை முயற்சி, போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it