1. Home
  2. தமிழ்நாடு

கைமாறியது ட்விட்டர்.. 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார் எலான் மஸ்க்..!

கைமாறியது ட்விட்டர்.. 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார் எலான் மஸ்க்..!


பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முயற்சித்து வந்தார். இதன்படி அவர், ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்தார்.

அத்துடன், ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்தார். முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேர்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், எலான் மஸ்கின் ஆஃபரை ட்விட்டர் நிர்வாகம் ஏற்றதாக தகவல் வெளியாகி இருந்தது. இதன்படி, பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்க டாலர் என்ற கணக்கில் வழங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வாரத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க்கிடம் விற்பனை செய்ய ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் நிர்வாகக் குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் தற்போது வெளியாகவில்லை. ட்விட்டர் நிறுவனத்தை தற்போது, இந்தியரான பராக் அகர்வால் வழிநடத்தி வருகிறார்.

Trending News

Latest News

You May Like