எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு!! VIDEO

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு!! VIDEO

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு!! VIDEO
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மருத்துவர் ஒருவர் பழுதான தனது ஓலா எலக்ட்ரிக் வண்டியை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிசியோதெரபி மருத்துவரான பிரித்திவிராஜ் கடந்த ஜனவரி மாதம் 1,40,000 ரூபாய் கொடுத்து ஓலா பைக்கை வாங்கினார். வாகனத்தை பதிவு செய்த முயற்சித்த போது ஓலா நிறுவனத்தாரால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆம்பூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வண்டியை எடுத்துச் சென்றபோது அங்கு குடியாத்தம் RTO-ல் பதிவு செய்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.

ola 1

இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு லட்சுமிபுரம் பகுதி வழியாக வந்துக் கொண்டிருந்த போது ஓலா பைக் பழுதாகி நின்றிருக்கிறது. இதனையடுத்து ஓலா சர்வீஸ் சென்டரை அழைத்து பைக்கை சரி செய்ய சொல்லி காலை 10.30 மணியளவில் புகார் கொடுத்திருக்கிறார்.

ஆனால் மதியம் இரண்டு மணி ஆகியும் ஓலா நிறுவனம் தரப்பில் இருந்து எவருமே வாகனத்தை சரி செய்ய வரவில்லை எனக் கூறி மருத்துவர் பிரித்திவிராஜ் வீடியோ வெளியிட்டார். ஏற்கெனவே இது போன்று ஓலா பைக் பழுதாகி வந்தது வழக்கமாகியிருக்கிறது.

ஆத்திரமடைந்த மருத்துவர் பிரித்திவிராஜ் பழுதான ஓலா பைக் மீது பெட்ரோலை ஊற்றி எரித்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it