எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி!!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி!!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி!!
X

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரகாஷ் என்பவர் கடந்த ஒரு வருடமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர் வழக்கம்போல பேட்டரியை சார்ஜ் செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்து தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதில் பிரகாஷின் அப்பா ராமசாமி பலத்த தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். ராமசாமியின் மனைவி கமலம்மா, பிரகாஷ், மருமகள் கிருஷ்ணவேணி ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்று படுகாயம் அடைந்தனர்.

electric

இதையடுத்து அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதாகபியூர் EV” என்ற உற்பத்தி நிறுவனம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருந்தங்களை தெரிவிக்கிறோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் பயனரின் தரவுத்தளத்தில் இந்த வாகனம் அல்லது சேவையை விற்பனை செய்ததற்கான எந்தப் பதிவேடும் இல்லை. வாகனம் செகண்ட் ஹேண்ட் விற்பனை மூலம் வாங்கப்பட்டதா என்பதைச் சரிபார்த்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it