தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை.. முதலமைச்சர் இன்று ஆலோசனை !

தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை.. முதலமைச்சர் இன்று ஆலோசனை !

தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை.. முதலமைச்சர் இன்று ஆலோசனை !
X

தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் பகலில் மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் இளநீர், தர்பூசணி பழக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது.
heat

இதனால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் காலை 11 மணி முதல் மதியம் மூன்று மணி வரை மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

heat

இந்நிலையில், தமிழகத்தில் வெயிலின் காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறயுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


newstm.in

Next Story
Share it