டெனால்ட் ட்ரம்ப் தினமும் 10,000 டாலர் அபராதம் செலுத்த உத்தரவு..!!

டெனால்ட் ட்ரம்ப் தினமும் 10,000 டாலர் அபராதம் செலுத்த உத்தரவு..!!

டெனால்ட் ட்ரம்ப் தினமும் 10,000 டாலர் அபராதம் செலுத்த உத்தரவு..!!
X

வழக்கு ஒன்றில் ஆவணங்களை அளிக்காததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை அவமதித்ததாக நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் தொழில் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை வழங்க நியுயார்க்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முதலில் மார்ச் 3ஆம் தேதி வரையும் பின்னர் மார்ச் 31ஆம் தேதிவரையும் அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் ட்ரம்ப் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அவர் நீதிமன்றத்தை அவமதித்ததாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தினமும் 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

dollar

இந்த தீர்ப்பு அவரை தண்டிப்பதற்காக அல்லவென்றும், அவர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவேண்டும் என்பதற்காகவே விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து ட்ரம்ப் மேல்முறையீடு செய்வார் என அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 10 ஆயிரம் அமெரிக்க டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் தினமும் 7 லட்ச ரூபாய் கட்ட வேண்டும்.

newstm.in

Next Story
Share it