இன்று அட்சய திருதியை.. தங்கம் ஏன் வாங்க வேண்டும் தெரியுமா?

இன்று அட்சய திருதியை.. தங்கம் ஏன் வாங்க வேண்டும் தெரியுமா?

இன்று அட்சய திருதியை.. தங்கம் ஏன் வாங்க வேண்டும் தெரியுமா?
X

அட்சய திருதியை என்றாலே இன்று நம் நினைவுக்கு வருவது தங்க நகைகளும், அதற்கான ஆஃபர்களும் தான். அதாவது, அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இதன் காரணமாக, அட்சய திருதியை அன்று பொதுமக்களில் பலா் சிறிதளவேனும் தங்கம் வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என ஆர்வம் காட்டுவர்.

அட்சய திருதியை. இந்துக்களும், சமணர்களும் வழிபடும் புனித நாள். ஆனால், கொரோனா தொற்றால், கடந்த இரு ஆண்டுகளாகவே அட்சய திருதியை நாளில் ஊரடங்கால் நகைக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க இயலவில்லை.

gold-new.

இந்த நிலையில், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் தற்போது கடைகள் முழு அளவில் திறக்கப்பட்டுள்ளன. எனவே, நிகழாண்டு அட்சய திருதியை நாளான இன்று நகைக்கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அட்சய திருதியை நாளன்று நகை வாங்குவதற்காக முன்பதிவு சில நாள்களுக்கு முன்பே தொடங்கியது.

பொது மக்களின் வசதிக்காக, சென்னையில் இன்று அதிகாலை 5 மணிக்கே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. நகைக்கடைகளில் நகை வாங்க வரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்துள்ளனா். தங்க நாணயம் வாங்குபவா்களுக்கு தனித்தனி கவுன்ட்டா்களில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

gold-new.

அள்ள அள்ள குறையாதது அட்சயம்.மூன்றாவது நாளை குறிப்பது திருதியை.இந்த இரண்டு சமஸ்கிருத சொற்கள் இணைந்ததே அட்சய திருதியை. சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது இந்த அட்சய திருதியை. பிரம்மா உலகத்தை படைத்தது, குசேலன் குபேரயோகம் பெற்றது, தருமருக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரம் கொடுத்தது, ஈசனுக்கே அன்னை அன்னபூரணி அமுது வழங்கியது இப்படி அடுக்கடுக்கான அத்தனை நிகழ்வுகளும் நடைபெற்றது இதே அட்சய திருதியை நாளில் தான் என்கின்றன இந்து இதிகாசங்கள்.

அத்தகைய நாளில் தங்கம் வாங்குவதை விட, தானம் செய்வதே மிகச்சிறந்த புண்ணியம் என்கிறது தர்ம சாஸ்திரம்.செல்வங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை இறைவன் எப்போதும் விரும்புவதில்லை. இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து, இல்லாமை நீங்க படைக்கப்பட்ட நாளே அட்சய திருதியை

newstm.in

Next Story
Share it