ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி.. எப்போது தெரியுமா..?

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி.. எப்போது தெரியுமா..?

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி.. எப்போது தெரியுமா..?
X

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘அரசியலுக்கு வரப்போவதில்லை’ என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அவரிடம் ஆதரவு கேட்ட கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் தரப்பிலான பதில் ஏமாற்றத்தையே தந்தது.

இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு சில காலமே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் பிரபலங்களின் ஆதரவை பெறுவதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

அதிலும், ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்களை தங்கள் பக்கம் இழுப்பதிலும், அவர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதிலும் பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ‘மக்களிடம் இன்றும் நெருக்கமான தொடர்பு கொண்டவர் ரஜினிகாந்த்’ என, பாஜகவினர் பேசத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, ரஜினிகாந்த் நடிக்கும் பட வேலை ஆரம்பிக்கும் போதும், பட வெளியீட்டின் போதும், அவர் பற்றிய பேச்சு அதிகரிக்கும். அந்த வகையில், ‘ஜெயிலர்’ பட வேலைகள் துவங்குவதால், தற்போது ரஜினி பற்றிய பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில், “வரும் ஏப்ரல் மாதத்திற்குள், ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்” என, அவருடைய அண்ணன் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ‘கர்நாடக மாநில கவர்னராக ரஜினியை அறிவிக்கப் போகின்றனர்’ என்ற பேச்சும் பரவி வருகிறது. இப்போதைக்கு, ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெளியாகும் வரை, அவர் குறித்த பேச்சுகளுக்கு பஞ்சம் இருக்காது.

Tags:
Next Story
Share it