கார்த்தியின் விருமன் படம் ஒடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா ?

கார்த்தியின் விருமன் படம் ஒடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா ?

கார்த்தியின் விருமன் படம் ஒடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா ?
X

எம்.முத்தையா எழுதி இயக்கியுள்ள படம் விருமன். இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் கார்த்தி ஆகியோர் முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர், மற்றும் அதிதி ஷங்கர், சூரி மற்றும் ராஜ் கிரண் ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் பல முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.

பொழுதுபோக்குச் சித்திரமான விருமன் திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் பிரீமியரை பிரைம் வீடியோ அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், செப்டம்பர் 11, 2022 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் இத்திரைப்படத்தை கண்டு ரசிக்கலாம்.

மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், துணிச்சல் மற்றும் அன்புள்ளம் கொண்ட விருமன் என்ற கிராமத்து இளைஞன் தன் தாயின் தற்கொலைக்கு தன் தந்தை முனியாண்டி தான் காரணம் என்பதை அறிந்ததும் வீட்டை விட்டு வெளியேறி தனது ஆணவமிக்க தந்தையை தனது பாவங்களுக்கு விலை கொடுக்க வைக்கவும், தனது சகோதரர்களை அவரிடமிருந்து காப்பாற்றவும் போராடுகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியானபோது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து அற்புதமான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது

1

விருமன் படத்தை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில், "நிஜ வாழ்க்கையில் என்னை விட முற்றிலும் மாறுபட்ட மற்றும் நேரேதில் குணம் கொண்ட தந்தை முனியாண்டி கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது" என்று பிரகாஷ் ராஜ் கூறினார். "இதுவரை இம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை, கார்த்தி மற்றும் அதிதி போன்ற கடின உழைப்பும் திறமையும் கொண்ட கலைஞர்களுடன் இணைந்து நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் காட்சி மூலம், பார்வையாளர்கள் இப்படத்தை உலெகெங்கும் உள்ள பலரும் கண்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

“விருமன் ஒரு சிறந்த அனுபவம், அது என் மனதில் நீண்ட காலம் தாக்கம் ஏற்படுத்தும். பிரகாஷ் சாருக்கும் எனக்கும் மிகவும் சிறந்த மற்றும் மகிழ்ச்சியான உறவு இருக்கும் நிலையில் திரையில் இதற்கு எதிர்மறையான உறவு கொண்டிருப்பது போல நடிப்பது சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார் கார்த்தி. “எங்களை எதிரிகள் போல் காட்டும் இத்திரைப்படம் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கைக் கொடுக்கும். விருமனின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் மூலம் உங்களை மகிழ்விக்க நாங்கள் வருகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

1

"அறிமுகமாகும் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் சார் மற்றும் கார்த்தி போன்ற சிறந்த நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்வதை விட சிறந்த வாய்ப்பு வேறேதும் கிடையாது" என்று நடிகை அதிதி ஷங்கர் கூறினார். "முத்தையா சாரின் வழிகாட்டுதல், இச்சிறப்புமிக்க கலைஞர்களின் கீழ் இவ்வளவு அழகான ஸ்கிரிப்டில் பணிபுரிந்த பெருமை, ஒவ்வொரு நாளும் ஒரு கற்றல் அனுபவமாக மாறியது. இவ்வளவு பெரிய வாய்ப்புக்கு நியாயம் வழங்க நான் முயற்சித்துள்ளேன். படத்தின் உலகளாவிய பிரீமியர் பிரைம் வீடியோவில் இப்போது எங்கள் கடின உழைப்பை பார்வையாளர்களுக்கு இடையே எடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன். " என்று அவர் மேலும் கூறினார்.


Tags:
Next Story
Share it